தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக தனது பயணத்தை தொடங்கியவர் சூரி. விடுதலை படத்தின் மூலம் கதாநாயகனாக மாறிய இவர், கருடன், கொட்டுக்காளி, விடுதலை 2 ஆகிய 3 திரைப்படங்களில், கதையின் நாயகனாக நடித்து, அசத்தியுள்ளார்.
தற்போது, விலங்கு என்ற வெப் சீரிஸை இயக்கிய பிரசாந்த் பாண்டியராஜின் படத்தில், சூரி நடித்து வருகிறார். இந்நிலையில், இந்த திரைப்படத்தின் புதிய அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது.
அதன்படி, பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஐஸ்வர்யா லஷ்மி தான், சூரிக்கு ஜோடியாக இந்த படத்தில் நடிக்க உள்ளாராம்.