50வது நாளில் பொன்னியின் செல்வன்.. இதுவரை இத்தனை கோடி வசூலா?

மணிரத்னம் இயக்கத்தில், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி ஆகியோர் நடிப்பில் உருவான திரைப்படம் பொன்னியின் செல்வன். பெரும் வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம், அனைத்து மொழிகளிலும், வசூலை குவித்ததாக கூறப்பட்டது.

இந்நிலையில், 50 நாட்களை தற்போது கடந்துள்ள இந்த திரைப்படம், 500 கோடி ரூபாயை வசூலித்துள்ளது.

இதுகுறித்து பதிவிட்டுள்ள நடிகர் விக்ரம், என்னை யாராவது கிள்ளி, இது கனவல்ல என்று கூறுங்கள் என பதிவிட்டுள்ளார். இந்த பதிவு வைரலாகி வருகிறது.