ரசிகர்களை கடுப்பாக்கிய PS 1 படக்குழு!

மணிரத்னம் இயக்கத்தில், கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி அன்று வெளியான திரைப்படம் பொன்னியின் செல்வன். பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட இந்த திரைப்படம், இன்று வரை திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், இந்த திரைப்படம் வரும் நவம்பர் 4-ஆம் தேதி அன்று அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. ஆனால், இந்த திரைப்படத்தை, சப்ஸ்கிரைப் செய்த அனைவரும் பார்க்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

அதாவது, அமேசான் பிரைமுக்கு சப்ஸ்கிரிப்ஷன் செய்திருந்தாலும், வாடகை பணம் செலுத்தி தான் இந்த படத்தை பார்க்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திரையரங்குகளில் இந்த படத்தை பார்க்க முடியாத ரசிகர்கள் சிலர், ஓடிடி-யில் வெளியான பிறகாவது பார்க்கலாம் என்ற முடிவில் இருந்தனர். ஆனால், இந்த அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.