“பில்டப் கொடுத்தது எல்லாம் வீண்” – பொன்னியின் செல்வன் எப்படி இருக்கு?

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட நடிகர்கள் பட்டாளம் நடித்துள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். இன்று பிரம்மாண்டமாக வெளியாகியுள்ள இந்த திரைப்படம், பெரும் வசூல் சாதனை புரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், படத்தின் முதல் காட்சியை பார்த்துவிட்டு வெளியே வரும் ரசிகர்கள், படம் அருமையாக இருக்கிறது. செம பிரம்மாண்டமாக இருக்கிறது என்று கருத்து கூறி வருகின்றனர். ஒரு சிலர், படத்தின் தொழில்நுட்ப அம்சங்கள் மட்டும் நன்றாக இருக்கிறது.

ஆனால், திரைக்கதை மிகவும் மெதுவாக நகர்கிறது என்று கூறி வருகின்றனர். ஒரு சிலர், எதிர்பார்ப்பு எதுவும் இன்றி வந்தால், படத்தை ரசிக்கலாம் என்றும், பாகுபலி அளவிற்கு படம் பெரிதாக இல்லை என்றும் கூறி வருகின்றனர். பெரும் பில்டப் கொடுத்து வந்த படக்குழுவினருக்கு, இந்த கலவையான விமர்சனங்கள் ஏமாற்றத்தை அளித்து வருகிறது.