முகமூடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. இந்த படத்திற்கு பிறகு, தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் கவனம் செலுத்திய இவர், கடைசியாக பீஸ்ட் என்ற தமிழ் படத்தில் நடித்திருந்தார்.
தற்போது, சூர்யாவுடன் ரெட்ரோ என்ற படத்தில் அவர் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில், இப்படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பு குறித்து, பூஜா ஹெக்டே பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில், “நான் ராதே ஷ்யாம் என்ற தெலுங்கு படத்தில் நடித்திருந்தேன். அந்த படம் ஒரு தோல்வி படமாக அமைந்தது.
ஆனால், அதில் நான் நடித்த ஒரு காட்சியை பார்த்துவிட்டு தான், ரெட்ரோ படத்தில் நடிப்பதற்கு, கார்த்திக் சுப்புராஜ் என்னை அனுகினார்” என்று தெரிவித்துள்ளார்.