லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கூலி. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு, அனிருத் இசையமைத்துள்ளார்.
மிகவும் பிரம்மாண்டமான முறையில், இப்படம் உருவாகி வரும் நிலையில், புதிய அப்டேட் ஒன்று கசிந்துள்ளது. அதாவது, கூலி படத்தில், நடிகை பூஜா ஹெக்டே இணைந்துள்ளதாக, படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதுதொடர்பான புதிய போஸ்டர் ஒன்றையும், தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
