Connect with us

Raj News Tamil

நயன்தாராவை நெருங்கும் விஜய் பட நடிகை!

சினிமா

நயன்தாராவை நெருங்கும் விஜய் பட நடிகை!

லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா, ஒரு படத்தில் நடிப்பதற்கு 10 கோடி ரூபாய் வரை சம்பளமம் வாங்கி வருகிறார். இவரைவிட அதிகமாக தமிழில் யாரும் சம்பளம் வாங்குதில்லை என்று கூறப்படுகிறது.

ஆனால், விஜயின் பீஸ்ட் படத்தில் நடித்த பூஜா ஹெக்டே, அவரை முந்திவிடுவார் என்று, கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது. அதாவது, சூர்யாவின் 44-வது படத்தில், நடிகை பூஜா ஹெக்டே நடித்து வருகிறார்.

இப்படத்தில் நடிப்பதற்கு, அவருக்கு ரூபாய் 4 கோடி சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாம். இதேபோல், பாலிவுட்டில் தேவா என்ற படத்தில் அவர் நடித்து வருகிறார்.

இந்த இரண்டு படங்களும் வெற்றியை பெற்றால், அவரது சம்பளம் இன்னும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

More in சினிமா

To Top