‘தளபதி 69’-ன் கதாநாயகி இவரா? சிம்ரனும் இல்ல.. மமிதா பைஜூவும் இல்ல!

நடிகர் விஜய் நடிக்க உள்ள கடைசி படத்தின் அறிவிப்பு, நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருந்தது. இந்த அறிவிப்பில், இசையமைப்பாளர் மற்றும் இயக்குநரின் பெயர் மட்டும் தான் குறிப்பிடப்பட்டிருந்தது.

மற்ற நடிகர்களின், தொழில்நுட்ப கலைஞர்களின் விவரம், அடுத்தடுத்து அறிவிக்கப்பட உள்ளன. இந்நிலையில், இந்த திரைப்படத்தின் கதாநாயகி யார் என்பது தொடர்பான தகவல் தற்போது கிடைத்துள்ளது.

அதன்படி, இந்த திரைப்படத்தில், நடிகை பூஜா ஹெக்டே தான் கதாநாயகியாக நடிக்க உள்ளாராம். இதற்கு முன்னர், நடிகை சிம்ரன் அல்லது நடிகை மமிதா பைஜூ, கதாநாயகியாக நடிக்க உள்ளார்கள் என்ற தகவல் பரவி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Recent News