Connect with us

Raj News Tamil

தளபதி68 இல் இணையும் பிரபல டாப் ஹீரோக்கள்..!

சினிமா

தளபதி68 இல் இணையும் பிரபல டாப் ஹீரோக்கள்..!

தளபதி விஜய் தற்போது லியோ படத்தின் வெளியீட்டிற்காக காத்துக் கொண்டிருக்கிறார். இந்த படம் வெளியான பிறகு, தனது 68-வது படத்தின் ஷீட்டிங்கில் கலந்துக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், தளபதி68 ல் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாகவும், அதில் ஒரு கதாபாத்திரத்துக்கு ஜோடியாக ஜோதிகாவும், மற்றொரு கதாபாத்திரத்துக்கு ஜோடியாக பிரியங்கா மோகனும் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது மேலும் ஒரு புதிய தகவல் கசிந்துள்ளது. அதாவது, இரண்டு முக்கிய வேடங்களில் மாதவன் மற்றும் பிரபுதேவா நடிக்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

விஜய், ஜோதிகா, பிரியங்கா மோகன், மாதவன், பிரபுதேவா என தளபதி68ன் எதிர்பார்ப்பு கூடிக்கொண்டே செல்கிறது.

More in சினிமா

To Top