Connect with us

Raj News Tamil

பிரபல யூடியூபர் இர்பான் கார் விபத்து..பெண் ஒருவர் பலி

தமிழகம்

பிரபல யூடியூபர் இர்பான் கார் விபத்து..பெண் ஒருவர் பலி

பிரபல யூடியூபரான இர்பான் ‘இர்பான் வியூஸ்’ எனும் யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். உணவகங்களுக்கு சென்று உணவுகளை ரிவியூ செய்து பிரபலமடைந்தார். சில நாட்களுக்கு முன்பு இவருக்கு திருமணம் நடந்தது.

இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் உள்ள நகராட்சி அலுவலகம் அருகே நேற்றிரவு யூடியூபர் இர்பானுக்கு சொந்தமான சொகுசு கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 55 வயதான பத்மாவதி என்ற மூதாட்டி ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். காரை ஓட்டி வந்த அசாரூதின் என்பவரை மறைமலை நகர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Continue Reading
Advertisement
You may also like...
Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in தமிழகம்

To Top