சினிமா
துணிவு படத்தின் சாதனையை முறியடித்த போர் தொழில்..!!
விக்னேஷ் ராஜா இயக்கத்தில் சரத்குமார் மற்றும் அசோக் செல்வன் இணைந்து நடித்த திரைப்படம் போர் தொழில். இந்த படம் வெளியான நாளில் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. உலகளவில் இப்படம் ரூ. 30 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
இந்நிலையில் எச் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான ‘துணிவு’ படத்தின் சாதனையை ‘போர் தொழில்’ படம் முறியடித்துள்ளது.
‘துணிவு’ படம் கேரளா பாக்ஸ் ஆபிஸில் ரூ. 5 கோடி வரை வசூல் செய்திருந்தது. தற்போது ‘போர் தொழில்’ திரைப்படம் கேரளா பாக்ஸ் ஆபிஸில் ரூ. 5.1 கோடிக்கும் மேல் வசூல் செய்து ‘துணிவு’ படத்தின் பாக்ஸ் ஆபிஸ் சாதனையை முறியடித்துள்ளது.
You must be logged in to post a comment Login