தபால் வாக்குகள்: பாஜக முன்னிலை!

மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை இன்று (ஜூன் 4) காலை 8 மணிக்குத் தொடங்கியது.

ஏப்ரல் 19-ஆம் தேதி தொடங்கி ஜூன் 1-ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெற்றது.

இதற்கு முன்னதாக அரசு ஊழியர்கள், காவல்துறையினர், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் தபால் வாக்குகள் செலுத்தினர்.

இந்நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நாடு முழுவதும் நடைபெறுவதை முன்னிட்டு தபால் வாக்குகள் முதலில் எண்ணப்படுகின்றன. காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணப்பட்ட பின்னர் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8.30 மணிக்கு துவங்கும்.

காலை 8.30 மணி நிலவரப்படி பாஜக கூட்டணி 169 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இந்தியா கூட்டணி 93 இடங்களிலும் பிற கட்சிகள் 10 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.

RELATED ARTICLES

Recent News