நாளைய முதல்வரே…அண்ணாமலையை புகழ்ந்து போஸ்டர் ஒட்டிய பாஜகவினர்..!!

கரூரில் மாவட்ட பாஜக சார்பில் பாஜக அரசின் 9 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டம் மற்றும் “மாற்றத்திற்கான மாநாடு” என்ற தலைப்பில் கூட்டம் நடைபெறுகிறது. இந்த பொதுக் கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று பங்கேற்று உரையாற்றுகிறார்.

நீண்ட நாட்களுக்கு பிறகு தனது சொந்த ஊரான கரூரில் அண்ணாமலை கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்பதால் பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கரூர் மாநகர் முழுவதும் நீண்ட தூரங்களுக்கு கட்சி கொடி கம்பங்களை நட்டு வைத்தும், வாழ்த்து போஸ்டர்களை ஒட்டி குவித்துள்ளனர்.

குறிப்பாக நாளைய தமிழகத்தின் முதல்வரே, நாளைய தமிழகத்தின் அரசியல் வரலாறே, அரசியல் மாற்றத்திற்கான மாநாடு என்று பரபரப்பான வாசகங்களுடன் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

பாஜக சார்பில் நடைபெறும் மாநாடு, கரூர் மாநகர் மையப்பகுதியில் அமைந்துள்ள திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது.

RELATED ARTICLES

Recent News