வாரத்திற்கு 5 நாள் வேலை, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜன.30, 31 தேதிகளில் வேலைநிறுத்தம் செய்யப்படும் என வங்கி ஊழியர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், மும்பையில் நேற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில், கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து, வேலைநிறுத்த போராட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், 31-ம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.