காஞ்சிபுரம் அருகே உள்ள முசரவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருக்கு சொந்தமான கோழிப்பண்ணையில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. கோழிகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்ததால் அங்கிருந்த 3000 கோழிகள் தீயில் கருகி உயிரிழந்தது. இதனால் அப்பகுதி முழுவதும் பயங்கர துர்நாற்றம் வீசியது.
தகவலறிந்து காஞ்சிபுரம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். முசரவாக்கம் பகுதியில் அவ்வப்போது உயர் மின்னழுத்தம் மற்றும் குறைந்த மின் அழுத்தம் மாறி மாறி ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக கோழிப்பண்ணையில் தீப்பிடித்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த தீ விபத்தால் ரூ.15 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக ராஜேந்திரன் வருத்தத்துடன் தெரிவித்தார்.