சென்னையில் நாளை மின்தடை! எந்தெந்த இடங்களில்?

மின் வாரிய பராமரிப்பு பணிகளுக்காக, அரை நாட்கள் மின்தடை ஏற்படுத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், நாளை சென்னையில் ஒருசில இடங்களில் மின்தடை ஏற்பட இருப்பதாக, தமிழக அரசின் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், நாளை காலை 9 மணி முதல் 2 மணி வரை, மின்தடை ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், திருமுல்லைவாயில், ராமாபுரம், அடையாறு, குன்றத்தூர், திருமுடிவாக்கம், பெருங்களத்தூர் ஆகிய இடங்களிலும், அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும், நாளை மின்தடை ஏற்பட உள்ளது என்றும், அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Recent News