சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் என்னென்ன?

சென்னையில் உள்ள பல்வேறு பகுதிகளில், மின்வாரிய பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன்காரணமாக, ஒவ்வொரு முறையும், குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டும் மின்தடை ஏற்படுத்தப்படுகிறது. அதன்படி, நாளை மின்வாரிய பராமரிப்பு பணிகள், சென்னையின் குறிப்பிட்ட சில பகுதிகளில் நடக்க உள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், பொன்னேரி, தேனாம்பேட்டை, திருமுல்லைவாயல், கிழக்கு முகப்பேர் ஆகிய பகுதிகளிலும், அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும், காலை 9 மணி முதல், மதியம் 2 மணி வரை, பராமரிப்பு பணிகளுக்காக மின்தடை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2 மணிக்கு மேல், பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன், மீண்டும் மின் விநியோகம் செய்யப்படும் என்றும், அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Recent News