லாரி மீது மின் கம்பம் சாய்ந்ததால் 7 மணி நேரம் மின் தடை…மக்கள் அவதி

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் பஞ்சு ஏற்றி வந்த லாரி ஒன்று கம்பம் மீது உரசியதில் மின்கம்பம் ஒடிந்து வாகனத்தின் மேல் தொங்கியது. உடனே அங்கிருந்த பொதுமக்கள் மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து வந்த மின்வாரிய ஊழியர்கள் மின் இணைப்பை துண்டித்தனர். பின்னர், ஒடிந்த மின் கம்பத்தினை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

மின் கம்பம் ஒடிந்ததால் அப்பகுதியில் 7 மணி நேரத்திற்கு மின் தடை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

மேம்பாலம் கீழே உள்ள சர்வீஸ் சாலை தோண்டப்பட்டு உள்ளதால் இப்பகுதி வழியாக செல்லக்கூடிய சிறிய வாகனங்கள் மிகவும் சிரமப்பட்டு செல்கின்றன. எனவே மேம்பாலத்திற்கு கீழ் முறையாக சர்வீஸ் ரோடு உடனடியாக அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

RELATED ARTICLES

Recent News