இன்று மாலைக்குள் சென்னை முழுவதுமாக மின்சாரம் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
சென்னை எழிலகத்தில் உள்ள அவசர கட்டுப்பாட்டு மையத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது,
நேற்று இரவு முதல் மழை குறைந்ததால் சென்னையில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
சென்னையில் இன்று மதியம் பல்வேறு இடங்களில் மின்சாரம் சீரமைத்து விநியோகம் செய்யப்படும் சென்னையில் மட்டும் 6073 பணியாளர்கள் தற்போது மின்சார பணியாளர்கள் பணயில் ஈடுபட்டுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் மிக மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது மின்சார வழங்கும் பணியில் 1500க்கு மேற்பட்ட பணியாளர்கள் கூடுதலாக பணிகள் மேற்க்கொண்டு வருகின்றார்.
மயிலாப்பூர், இந்திரா நகர், அண்ணா சாலை, அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது மின்சாரம் முழுமையாக வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மின்சார உற்பத்தி நிலையம் பாதிப்பு இல்லை. மழை குறைந்தால் சென்னையில் இன்று மதியம் சீரான மின்சாரம் வழங்கப்படும்.
மாலைக்குள் மின்விநியோகம் சீராகும்.
மிக்ஜான் மிகப்பெரிய புயல் தாக்கிய போதும் தமிழகத்தில் குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழப்புகள் இல்லை என்பது சிறப்பான நடவடிக்கை.
இதற்கு முழுக்க முழுக்க காரணம் தமிழகம் முதலமைச்சரின் சிறிய அறிவுரை காரணமாகவே இந்த உயிரிழப்பு தடுக்கப்பட்டுள்ளது.