ஒரே மேடை.. குத்தாட்டம் போட்ட தனுஷ் – பிரபு தேவா!

இந்திய சினிமாவின் முன்னணி நடன இயக்குநராக இருப்பவர் பிரபு தேவா. இவர், சென்னையில் நேற்று நடன நிகழ்ச்சி ஒன்றை நடத்தியிருந்தார்.

இந்த நிகழ்ச்சியில், திரைத்துறையை சேர்ந்த பல்வேறு பிரபலங்கள் கலந்துக் கொண்டனர். அப்போது, பிரபுதேவாவும், நடிகர் தனுஷ்-ம், ரௌடி பேபி பாடலுக்கு ஒரே மேடையில் நடனம் ஆடியுள்ளனர்.

இதேபோல், நடிகர் எஸ்.ஜே.சூர்யாவும், பிரபுதேவாவும், காத்து அடிக்குது பாடலுக்கு நடனம் ஆடியுள்ளனர். இதுதொடர்பான வீடியோக்கள், இணையத்தில் வெளியாகி, வைரலாக பரவி வருகின்றன.

RELATED ARTICLES

Recent News