பிரதீப் ரங்கநாதன் செய்த மிகப்பெரிய தவறு!

பாலசேகரன் இயக்கத்தில், விஜய் நடிப்பில், 1997-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் லவ் டுடே. பெரும் வெற்றியை பெற்ற இந்த திரைப்படத்தின் தலைப்பு, தற்போது பிரதீப் ரங்கநாதன் இயக்கியுள்ள திரைப்படத்திற்கு வைக்கப்பட்டுள்ளது.

இந்த படமும் நல்ல வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்று வருகிறது. இந்த படம் இவ்வளவு வரவேற்பை பெற்றதற்கு, விஜய் பட டைட்டிலும் காரணம் என்று கூறப்படுகிறது. இந்த டைட்டில் வழங்கிய தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரிக்கும், தளபதி விஜய்-க்கும், படம் துவங்கும்போது நன்றி தெரிவித்துள்ளனர்.

ஆனால், படத்தின் இயக்குநர் பாலசேகரனுக்கு நன்றி எதுவும், இந்த படத்தில் குறிப்பிடவில்லை. பிரதீப் இவ்வாறு செய்திருப்பது தவறு என்றும், மரியாதை நிமித்தமாக கூட யாரும் அவரிடம் அனுமதி பெறவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.