லவ் டுடே படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இவர் தற்போது விக்னேஷ் சிவன், அஸ்வத் மாரிமுத்து ஆகியோரின் படங்களில் தொடர்ச்சியாக கமிட்டாகி வருகிறார்.
இந்த படங்களுக்கு பிறகு, தான் இயக்கும் படம் ஒன்றில், அவரே ஹீரோவாக நடிக்க உள்ளார். இவ்வாறு தொடர்ச்சியாக ஹீரோவாக நடித்து வரும் பிரதீப், அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, இனிமேல் தான் இயக்கும் படங்களில், தன்னையே ஹீரோவாக நடிக்க வைப்பதற்கு அவர் முடிவு செய்துள்ளாராம்.
ரஜினி, விஜயே வந்தாலும் தன்னுடைய முடிவில் இருந்து மாறப்பபோவதில்லை என்று கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது. இந்த தகவலை அறிந்த ரசிகர்கள், அதிருப்தி அடைந்துள்ளனர்.