“ஆள விடுங்கடா சாமி” – எஸ்கேப் ஆன பிரதீப்!

லவ் டுடே இயக்குநர் பிரதீப் ரங்கநாதனின் பழைய பேஸ்புக் பதிவுகள், சமீபத்தில் வெளியானது. அதில், யுவன் ஒரு தண்டம், மங்காத்தா BGM ஆங்கில படத்தில் இருந்து திருடப்பட்டது, சச்சின் ஒரு செல்பிஷ் என்று சர்ச்சையாக அந்த பதிவுகளில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இது, தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ள பிரதீப் ரங்கநாதன், என் பெயரில் பரவி வரும் பதிவுகள், போட்டோஷாப் செய்யப்பட்டவை என்று தெரிவித்துள்ளார். மேலும், எனது முகநூல் பக்கத்தை நீக்கிவிட்டேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.