“என் ஆடையை கழட்ட சொல்வார்” – பிரஜ்வல் ரேவண்ணா குறித்து இன்னொரு பகீர் புகார்!

மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் எம்.பி.பிரஜ்வல் ரேவண்ணா, சமீபத்தில் ஆபாச வீடியோ தொடர்பான புகாரில் சிக்கியிருந்தார். இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில், திடீரென அவர் ஜெர்மனி நாட்டிற்கு தப்பியோடி விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பிரஜ்வல் ரேவண்ணா குறித்து, இன்னொரு பெண், அதிரடி புகார் ஒன்றை அளித்துள்ளார்.

இதுகுறித்து அந்த பெண் பேசும்போது, “ பிரஜ்வல் எனக்கு செல்போனில் அழைப்பு விடுப்பார் மற்றும் எனது ஆடைகளை கழட்ட வேண்டும் எனக் கூறி தொல்லை செய்வார். என்னுடைய தாயின் செல்போன் எண்ணுக்கு அழைப்பு விடுப்பார். அந்த வீடியோ கால்-க்கு Attend செய்ய வேண்டும் என கட்டாயப்படுத்துவார். நான் அதற்கு மறுக்கும்போது, என்னையும், என் தாயையும் அச்சுறுத்துவார்” என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து, “ இந்த சம்பவம் குறித்து அறிந்தபோது, எங்களுடைய குடும்பம் எனக்கும், என் தாய்க்கும் ஆதரவாக இருந்தது. அதன்பிறகு, நாங்கள் காவல்துறையில் புகார் அளித்தோம்” என்றும் அந்த பெண் கூறியுள்ளார்.

மேலும், “என்னுடைய தாய், 4-ல் இருந்து 5 மாதங்களுக்கு ஒரு முறை தான், எங்களுடைய வீட்டிற்கு வருவார். அவர் பிரஜ்வல் ரேவண்ணாவின் வீட்டில் கடுமையான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். அவர்கள் என்னுடைய தாயை ஒரு அடிமைப் போல் நடத்தினார்கள் மற்றும் என்னுடைய தந்தையை கடுமையாக தாக்கினார்கள்” என்று கூறினார்.

இதுமட்டுமின்றி, தன்னுடைய தந்தையின் வேலையை பறித்துவிடுவேன் என்று கூறி, பிரஜ்வல் ரேவண்ணா அச்சுறுத்தியதாகவும், தன்னையும், தன்னுடைய தாயையும், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாகவும் கூறியுள்ளார். மேலும், ரேவண்ணாவின் வீட்டில் பணிபுரிந்த பல்வேறு பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகவும், தற்போது வரை 3 பெண்கள் மட்டும் தான் அதனை வெளியில் கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

Recent News