தளபதி 69 படத்தில் இணையும் மாஸ் நடிகர்?

தி கோட் படத்தில் நடித்து முடித்துள்ள நடிகர் விஜய், எச்.வினோத் கூட்டணியில் உருவாக உள்ள படத்தில், கடைசியாக நடிக்க உள்ளார்.

அனிருத் இசையமைக்க உள்ள இப்படத்தை, கே.வி.என். புரொடக்ஷன் என்ற நிறுவனம் தயாரிக்க உள்ளது.

இந்நிலையில், இப்படத்தில் பிரபல வில்லன் நடிகர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, நடிகர் பிரகாஷ்ராஜ், தளபதி 69 படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளாராம்.

இதற்கு முன்னர், கில்லி, சிவகாசி, வில்லு, போக்கிரி, வாரிசு என்று பல்வேறு படங்களில், விஜயும், பிரகாஷ் ராஜ்-ம் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Recent News