விஜயை சந்தித்த பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர்!

தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில், புதிய அரசியல் கட்சியை நடிகர் விஜய், சமீபத்தில் துவக்கியிருந்தார். இந்த கட்சியை வலுப்படுத்தும் விதமாக, விழுப்புரம் மாவட்டத்தில் பிரம்மாண்ட மாநாடு ஒன்றை நடத்தியிருந்தார். தற்போது, கட்சியின் நிர்வாகிகளை நியமிக்கும் பணியில், தீவிரம் காட்டி வருகிறார்.

அடுத்த வருட தொடக்கத்தில் இருந்து, சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை, அவர் தொடங்குவார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர், இன்று விஜயை அவரது இல்லத்தில் சந்தித்துள்ளார். இந்த சந்திப்புக்கான காரணம் குறித்து, இதுவரை தகவல் எதுவும் வெளியாகவில்லை.

ஆனால், 2026-ஆம் ஆண்டு நடக்க உள்ள தேர்தல் குறித்து, இந்த சந்திப்பு நடந்திருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், த.வெ.க-வில் சமீபத்தில் இணைந்த ஆதவ் அர்ஜூனாவின் முயற்சியால், இந்த சந்திப்பு நடந்திருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

RELATED ARTICLES

Recent News