கன்னட சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் பிரசாந்த் நீல். கே.ஜி.எஃப் திரைப்படத்தின் மூலமாக, இந்தியா முழுவதும் பிரபலமாகினார். இதனால், இவர் இயக்கும் படங்களுக்கு, ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
இந்நிலையில், இயக்குநர் பிரசாந்த் நீல் பிரபல ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில், தனது கடைசி படைப்பான சலார் திரைப்படம் குறித்து பேசியுள்ளார்.
அதாவது, “சலார் படத்தின் முதல் பாகம், நான் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை” என்றும், “சலார் படத்தின் 2-ஆம் பாகத்தை, மிகவும் சிறப்பான திரைப்படமாக எடுக்க முடிவு செய்திருக்கிறேன்” என்றும் தெரிவித்தார்.
மேலும், “இதுவரை நான் எடுத்த படைப்புகளிலேயே, சலார் 2 தான் சிறந்த படைப்பாக இருக்கும்” என்றும் அவர் கூறியுள்ளார். இது, ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பபை ஏற்படுத்தியுள்ளது.