சின்னத்திரை சீரியல்கள் நடித்து அறிமுகமானவர் பவானி. பின்னர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 5 சீசனில் கலந்து கொண்ட இவர், அதன் மூலம் மக்களிடம் நல்ல ஆதரவை பெற்றார். அதேபோன்று அந்நிகழ்ச்சியில் நடித்த அமீர் என்பவரை காதலிப்பதாக செய்திகள் வந்தன. ஆனால் இதற்கு எவ்வித மறுப்பும் தெரிவிக்காமல் இருவரும் பல்வேறு இடங்களில் சுற்றி வருகின்றனர். மேலும் இருவரும் இணைந்து அஜித்தின் துணிவு படத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றனர்.
இந்த நிலையில் அண்மையில் நடிகை பவானியின் இன்ஸ்டா பக்கத்தில் ரசிகர் ஒருவர், உங்களுக்கும், அமீருக்கும் திருமணம் முடிந்ததை ஏன் கூறவில்லை என கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த இவர், கடந்த மாதம் நான் கர்ப்பமாக இருப்பதாக நீங்களே முடிவு செய்தீர்கள் பிறகு, நாங்கள் இருவரும் பிரிந்து விட்டதாக சொன்னார்கள், இப்போது நாங்கள் ரகசியமாக திருமணம் செய்துகொண்டோம் என்று சொல்லுகிறார்கள் அடுத்து என்ன, என்று கிண்டாலாக பதிலடி கொடுத்துள்ளார்.