திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த அமைத்துள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் 16-க்கு மேற்பட்ட மலைவாழ் கிராமங்கள் உள்ளன.
இங்கு பல்வேறு கிராமங்களுக்கு சாலை வசதி இல்லாததால் மருத்துவ காலங்களிலும், அவசர நேரங்களிலும் தொட்டில் கட்டி தூக்கி வரும் அவல நிலை பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது.
திருமூர்த்திமலை அடுத்துள்ள குருமலை மலைவாழ் மக்கள் செட்டில்மெண்ட் பகுதியில் வசித்து வருபவர் குருசாமி இவரது மனைவி சுமதி என்பவர் இரண்டு மாத கர்ப்பமாக உள்ள நிலையில் நேற்று இருந்து தொடர் வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், அங்கு சாலை வசதிகள் இல்லாததால் கர்ப்பிணி பெண் சுமதியை கரடு முரடான மலைப் பகுதியில் சுமார் ஏழு கிலோமீட்டர் தொலைவுக்கு மலையடிவாரத்தில் உள்ள திருமூர்த்திமலை பகுதிக்கு கொண்டு வந்தனர். பின்னர் அங்கிருந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் உடுமலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்துள்ளனர்.
கர்ப்பிணி பெண்ணை சிகிச்சைகாக அங்குள்ள மக்கள் தொட்டில் கட்டி வரும் காட்சி தற்பொழுது சமூக வலைதளங்கில் வெளியாகி வைரலாகி வருகிறது.