தமிழ் சினிமாவின் காமெடி நடிகர்களில் ஒருவர் பிரேம்ஜி. இவர் சமீபத்தில், தனது சமூக வலைதளப் பக்கத்தில், பதிவு ஒன்றை வெளியிட்டார்.
அதில், இந்த 2024-ஆம் ஆண்டில், தான் திருமணம் செய்துக் கொள்ளப்போவதாக கூறினார். இதனை பார்த்த ரசிகர்கள், இவர் Prank செய்வதாக நினைத்தனர். ஆனால், அவர் சொன்னது உண்மை என்பது தற்போது தெரியவந்துள்ளது.
மேலும், பிரபல பாடகி வினைட்டா என்பவரை தான், அவர் திருமணம் செய்ய இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. இவர்கள் இரண்டு பேருக்கும், 20 வயது வித்தியாசம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.