காந்தி ஜெயந்தி முன்னிட்டு தேமுதிக சார்பில் அதன் கழகப் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் தலைமையில் மது மற்றும் போதை பொருள் ஒழிக்க வலியுறுத்தி அமைதி பேரணி ஊர்வலமாக சின்னமலையில் தொடங்கி காந்தி மண்டபம் வரையில் இந்த பேரணி மேற்கொண்டனர்.
பின்னர் காந்தி மண்டபத்தில் உள்ள காந்தியின் நினைவிடத்தில் அவரது திருவுரு சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பின், அதற்கு அடுத்துள்ள காமராஜரின் 49 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு காமராஜரின் திருவுருவ சிலைக்கு மலர் தூவி மரியாதை செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக கழகப் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்
இந்த முக்கியமான நாளில் இரு முக்கிய தலைவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக கேப்டன் ஆணைக்கிணங்க மது ஒழிப்பை வலியுறுத்தி மாபெரும் பேரணியை நடத்தி வந்து மலர் அஞ்சலி செலுத்தியுள்ளோம்.
காந்தி ஜெயந்தி என்று சொன்னாலே மதுவை ஒழிக்கும் முக்கியமான நாள்.
ஆனால் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் அதிகமாக உள்ளது ஒட்டுமொத்த தமிழகமும் போதை தமிழகமாக மாறி உள்ளது.
நம் முதல்வரிடம் கேட்டால் போதை இல்லா தமிழகமே எங்கள் லட்சியம் என்கிறார், அதனால்தான் எங்கள் கழகத்தினர் அனைவரும் ஸ்டாலின் அண்ணாச்சி வாக்குறுதி என்னாச்சு என்று கேட்கிறார்கள்.தமிழகம் முழுவதும் மதுவும் போதை பொருட்கள் விற்பனையும் மிக அதிகமாக உள்ளது. கள்ளச்சாராயம் காய்ச்சி பலர் உயிரிழந்துள்ளனர். தமிழக அரசு இதை வேடிக்கை பார்க்கிறது. இதற்காகத்தான் மகாத்மா காந்தி நமக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தாரா என்ற கேள்வி எழுகிறது.
ஆயிரம் ரூபாய் கொடுத்து ஒட்டுமொத்த பெண்களின் தாலியை அறுக்காமல் டாஸ்மாக்கை மூட வேண்டும் இந்தியாவிலேயே அதிக விதவைகள் இருப்பது தமிழ்நாட்டில் தான்.
டாஸ்மாக் கடைகள் படிப்படியாக நேரத்தை குறைத்து கடைகளை குறைத்து ஒழிக்க வேண்டும், போதையில தமிழ்நாட்டை உருவாக்க வேண்டியது இந்த அரசின் முக்கிய கடமை இந்த நல்ல நாளில் அதனை நினைவூட்ட கடமைப்பட்டுள்ளோம் என பேட்டி அளித்துள்ளார்.