Connect with us

Raj News Tamil

விஜய்-க்கு கண்டிஷன் போட்ட பிரேமலதா?

சினிமா

விஜய்-க்கு கண்டிஷன் போட்ட பிரேமலதா?

நடிகர் விஜய் தற்போது தி கோட் படத்தில் நடித்து வருகிறார். சயின்ஸ் பிக்ஷன் பாணியில் தயாராகி வரும் இந்த திரைப்படத்தில், மறைந்த நடிகரும், அரசியல்வாதியுமான கேப்டன் விஜயகாந்த், ஏ.ஐ தொழில்நுட்பம் மூலம் காட்சிப்படுத்தப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

இவ்வாறு விஜயகாந்தை திரையில் கொண்டு வருவதற்கு, முன்பு சம்மதம் தெரிவித்த பிரேமலதா, தற்போது சில கண்டிஷன்களை போட்டுள்ளாராம்.

அதாவது, இப்படத்தில் கேப்டன் எவ்வாறு சித்திரிக்கப்பட்டுள்ளார் என்பதையும், அவரது காட்சிகள் எவ்வாறு உள்ளது என்பதையும் பார்க்க வேண்டும் என்று அவர் கேட்டுள்ளாராம்.

இதற்கு படக்குழுவினரும், சம்மதம் தெரிவித்துவிட்டார்களாம். இவ்வாறு விஜயகாந்தை ஏ.ஐ தொழில்நுட்பத்தில் கொண்டு வந்ததற்காக, பிரேலதாவிற்கு பெரிய தொகையை கொடுக்க தயாரிப்பாளர்கள் முன்வந்ததாகவும், அதற்கு அவர் மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More in சினிமா

To Top