பிரபு தேவா நடிக்கும் புதிய படத்தில் இணைந்த பிரேம் பட நாயகி..!

இந்தியாவின் மைக்கில் ஜாக்சன் என்று அழைக்கப்படும் பிரபு தேவா நடனத்துக்கு பெயர் போனவர். பல படங்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றியுள்ள இவர் தேசிய விருதையும் வென்றிருக்கிறார்.

இயக்குனர் அவதாரம் எடுத்த பிரபு தேவா போக்கிரி, வில்லு ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இவர் தற்போது ஆத்விக் ரவிச்சந்திரனின் இயக்கத்தில் உருவாகியுள்ள பஹீரா திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன.

இந்நிலையில், இயக்குனர் சக்தி சிதம்பரத்துடன் மீண்டும் இணைந்திருக்கிறார் பிரபு தேவா. ஏற்கனவே சார்லி சாப்ளின் மற்றும் அதன் இரண்டாம் பாகம் ஆகியவற்றில் இருவரும் இணைந்து பணியாற்றியிருந்த நிலையில் மீண்டும் தற்போது இருவரும் இணைந்துள்ளனர்.

இதில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக மடோனா செபாஸ்டியன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும். நடிகை அபிராமி இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடிப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

RELATED ARTICLES

Recent News