வெட்டப்பட்ட விலங்குகளின் கொழுப்பில் இருந்து எண்ணெய் தயாரிப்பு – இருவர் கைது

ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டத்தில் உள்ள துனி நகர ராமகிருஷ்ணா காலனியில் சிலர் விலங்குகளின் கொழுப்பு, எலும்பு ஆகியவற்றிலிருந்து எண்ணெய் பிழிந்து அவற்றை சமையல் எண்ணெயுடன் கலந்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சுகாதாரத்துறை அதிகாரிகள், சுகாதார பணியாளர்கள் ஆகியோருடன் அங்கு சென்ற போலீசார் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வீட்டில் ஏராளமான அளவில் பசுவின் தோல்கள், வெட்டப்பட்ட பசுவின் உடல், வெட்டுவதற்காக கட்டி வைக்கப்பட்டிருந்த பசுக்கள், பசுக்களின் கொழுப்பிலிருந்து எடுக்கப்பட்ட எண்ணெய், கலப்படம் செய்யப்பட்ட எண்ணையுடன் கூடிய டின்கள் ஆகியவற்றை போலீசார் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.

போலீசாருடன் சென்ற சுகாதாரத்துறை அதிகாரிகள் அங்கிருந்த கலப்பட எண்ணெய், விலங்குகளின் கொழுப்பில் இருந்த தயாரிக்கப்பட்ட எண்ணெய் ஆகியவற்றின் மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்காக எடுத்து சென்றுள்ளனர். இது தொடர்பாக இரண்டு பேரை கைது செய்துள்ள போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்துகின்றனர்.

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் விலங்குகளின் உடல் பாகங்களில் இருந்து பிழியப்பட்ட எண்ணையை பயன்படுத்தி கலப்படம் செய்யப்பட்ட எண்ணையை சிறிய உணவகங்கள் மற்றும் உள்ளூரில் சோப்பு தயாரிக்கும் நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு சப்ளை செய்வதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இரண்டு பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த கலப்பட எண்ணெய் கும்பலில் மேலும் பலர் இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.

RELATED ARTICLES

Recent News