குடியரசு தலைவர் திரவுபதி முர்மு தமிழகம் வருகை..!

திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராம பல்கலை கழகத்தின் 36-வது பட்டமளிப்பு விழா கடந்த 11-ஆம் தேதி நடைபெற்றது.
இவ்விழாவில் பாரத பிரதமர் நரேந்திர கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் முதலைமைச்சர் முக ஸ்டாலின், ஆளுநர் என்.ஆர். ரவி, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் கொரானா காலங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2020-2021, 2021-2022 ஆண்டு பட்டம் பெற்ற மாணவிகளுக்கு வருகின்ற ஜனவரி மாதத்தில் கொடுக்கப்படவுள்ளது. இதில் குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு கலந்து கொண்டு பட்டங்களை வழங்கவுள்ளார்.