மதுரை மற்றும் கோவையில் நடைபெறும் நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வரும் 18-ம் தேதி தமிழ்நாட்டிற்கு வர உள்ளார்.
கோவை ஈஷா மையத்தில் சிவராத்திரி விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்த மகா சிவராத்திரி விழாவில் கலந்துகொள்வதற்காகக் பிப்ரவரி 18ஆம் தேதி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தமிழ்நாட்டிற்கு வருகை தரவுள்ளார்.
சிறப்பு விமானம் மூலம் டெல்லியிலிருந்து மதுரைக்கு வர உள்ளார். முதலில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்யவுள்ளதாகவும், அதன் பிறகு அவர் கோவை புறப்படுவார் எனவும் கூறப்பட்டுள்ளது.
திரௌபதி முர்மு குடியரசு தலைவராக பொறுப்பேற்ற பிறகு முதன் முறையாக தமிழ்நாட்டிற்கு வர உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.