குடியரசு தலைவர் திரவுபதி முர்மு இரண்டு நாள் பயணமாக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் நேற்று காலை 11.45 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தர்சனம் செய்த பின்னர் மகா சிவராத்திரியையொட்டி நேற்றிரவு ஈஷா யோகா மையத்துக்கு சென்று சிவராத்திரி விழாவில் கலந்து கொண்டார்.

இதனைத் தொடர்ந்து குன்னூர் வெலிங்டன் ராணுவ கல்லூரி நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் கலந்துகொள்வதாக இருந்தது. இந்நிலையில் மோசமான வானிலை காரணமாக வெலிங்டன் ராணுவ கல்லூரிக்கு வரும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.
குடியரசு தலைவரின் வருகைக்காக வெலிங்டன் ராணுவ கல்லூரியில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. எனினும் மோசமான வானிலை காரணமாக குடியரசு தலைவரின் குன்னூர் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.