முகமது ஷமி உட்பட 26 பேருக்கு “அர்ஜுனா விருது” வழங்கிய குடியரசுத் தலைவர்!

விளையாட்டுத் துறையில் சிறப்பான பங்களிப்பைச் செலுத்தி வரும் வீரர் மற்றும் வீராங்கனைகளை கவுரவிக்கும் விதமாக மத்திய அரசு ஆண்டுதோறும் விருதுகள் அறிவித்து வருகிறது.

அந்த வகையில் 2023-ம் ஆண்டுக்கான அர்ஜுனா, கேல் ரத்னா, துரோணாச்சாரியா விருதுகளை மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் அறிவித்திருந்தது.

இந்நிலையில், டெல்லியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வீரர்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவித்தார்.

‘மேஜர் தியான்சந்த் கேல் ரத்னா விருது’ பாட்மின்டன் வீரர்களான சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி, சிராக் ஷெட்டி ஆகிய இருவருக்கு வழங்கப்பட்டது.

சிறந்த போட்டியாளர்களுக்கான ‘அர்ஜுனா விருது’, கிரிக்கெட் வீரர் முகமது ஷமி, தமிழக செஸ் வீராங்கனை ஆர்.வைஷாலி உள்ளிட்ட 26 பேருக்கு வழங்கப்பட்டது.

அவர்களின் விபரம் பின்வருமாறு:-

1.ஓஜஸ் பிரவின் தியோடலே (வில்வித்தை), 2. அதிதி கோபிசந்த் சுவாமி (வில்வித்தை), 3. ஸ்ரீசங்கர் எம் (தடகளம்), 4. பருல் சவுத்ரி (தடகளம்), 5. முகமது ஹுசாமுதீன் (குத்துச்சண்டை), 6. ஆர் வைஷாலி (சதுரங்கம்), 7. முகமது ஷமி (கிரிக்கெட்), 8. அனுஷ் அகர்வாலா (குதிரையேற்றம்), 9. திவ்யகிருதி சிங் (குதிரைச்சவாரி ஆடை), 10. திக்ஷா தாகர் (கோல்ப்), 11. கிரிஷன் பகதூர் பதக் (ஹாக்கி), 12. புக்ரம்பம் சுசீலா சானு (ஹாக்கி), 13. பவன் குமார் (கபடி), 14. ரிது நேகி (கபடி), 15. நஸ்ரீன் (கோ-கோ), 16. பிங்கி (புல்வெளி கிண்ணங்கள்), 17. ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் (தூப்பாக்கி சுடுதல்), 18. இஷா சிங் (தூப்பாக்கி சுடுதல்), 19. ஹரிந்தர் பால் சிங் சந்து (ஸ்குவாஷ்), 20. அய்ஹிகா முகர்ஜி (டேபிள் டென்னிஸ்), 21. சுனில் குமார் (மல்யுத்தம்), 22. ஆன்டிம் (மல்யுத்தம்), 23. நௌரெம் ரோஷிபினா தேவி (வுஷு), 24. ஷீத்தல் தேவி (பாரா வில்வித்தை), 25. இல்லூரி அஜய் குமார் ரெட்டி (பார்வையற்ற கிரிக்கெட்), 26. பிராச்சி யாதவ் (பாரா கேனோயிங்).

RELATED ARTICLES

Recent News