தென்அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு ஈகுவடார். வன்முறைகளும் போதை பொருள் கடத்தல்களும் அதிகளவு நடக்கும் நாடாக திகழும் ஈகுவடாரில் விரைவில் அதிபர் தேர்தல் நடக்க உள்ளது. இதனால் இதில் போட்டியிட்டு வெற்றி பெற பெர்னாண்டோ விலாவிசென்சியோ என்பவர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். அப்போது அவர் தலைநகர் குவிட்டோவில் பிரச்சாரம் செய்துகொண்டிருந்தபோது மர்ம நபரால் சுடப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
அதிபர் வேட்பாளராக போட்டியிட இருந்த பெர்னாண்டோ விலாவிசென்சியோ உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் விலாவிசென்சியோவை கொன்றது யார்? இதன் பின்னணியில் வேறேதேனும் காரணங்கள் உள்ளதா?என்ற
கோணத்தில் அந்நாட்டு விசாரணை அமைப்பு விசாரித்து வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து தற்போதைய அதிபர் கில்லர்மோ லாஸ்ஸோ, இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தண்டிக்காமல் விடமாட்டேன் என்றும்
அவர்களுக்கு சட்டத்தின் பலம் முழுமையாக காட்டப்படும் என்றும் கூறியுள்ளார்.