மேற்கு வங்கம் மால்டா மாவட்டத்தில் ரயிலின் பெறும் விபத்தை தவிர்த்த 12 வயது சிறுவன்.
இதுகுறித்து ரயில்வே சார்பில் வெளியிட்ட அறிக்கை: கடந்த வியாழக்கிழமை பலூக்கா ரயில்வே பணிமனையின் அருகே கனமழையால் தண்டவாளம் சேதமடைந்திருந்தது. அந்த வழித்தடத்தில் பயணிகள் ரயில் வேகமாக வருவதை முா்சலின் ஷேக் என்ற 12 வயது சிறுவன் கண்டான்.
அந்த தண்டவாளத்தில் ரயில் பயணித்தால் விபத்துக்குள்ளாகும் என்பதை உடனே உணா்ந்து, அவன் அணிந்திருந்த சிவப்பு சட்டையை கழற்றி வேகமாக அசைத்து ரயில் ஓட்டுநருக்கு எச்சரிக்கை செய்துள்ளான். இதை கவனித்த ரயிலின் ஓட்டுநா் உடனடியாக ரயிலை நிறுத்தினார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
சேதமான ரயில் வழித்தடம் சீரமைக்கப்பட்டு வழக்கமான ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டது. விபத்தை தடுத்த சிறுவனின் துணிவைப் பாராட்டி வடக்கு மால்டா நாடாளுமன்ற உறுப்பினா் ககேன் முா்மு மற்றும் கதிஹார் ரயில்வே கோட்ட மேலாளா் ஸ்ரீசுரேந்திர குமார் ஆகியோர் சிறுவனின் வீட்டிற்கு நேரில் சென்று அவனுக்குப் பாராட்டுச் சான்றிதழையும் பரிசுத் தொகையையும் வழங்கினா். இந்த இளம் வயதிலேயே சமூகத்தின் மீது அக்கறை கொண்ட சிறுவனின் மன தைரியத்தை வடகிழக்கு ரயில்வே பாராட்டி உள்ளது.