ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டம் வினுகொண்டாவில் சுமார் 700 ஆண்டுகள் பழமையான சிவன் கோயில் ஒன்று உள்ளது.
அந்த கோவிலில் பிரசாத் என்பவர் பூசாரி ஆக வேலை செய்து வருகிறார். அவர் கோவிலில் உள்ள தாயார் சந்ததியில் கால் மேல் கால் போட்டு அமர்ந்து பிளாஸ்டிக் பாட்டிலில் மதுவை ஊற்றி எதையோ கலந்து அருந்தி கொண்டிருந்தார்.
பூசாரி பிரசாதின் அந்த காட்சியை வீடியோ எடுத்த நபர் அதை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது. மேலும் பூசாரி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை தற்போது எழுந்துள்ளது.