பிரதமர் பதவியேற்பு விழா கடும் வெயில் காரணமாக இரவு நேரத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. திறந்த வெளி இடத்தில் விழா நடைபெற உள்ளது. 10,000 பேர் பங்கேற்க உள்ளனர்.
வெப்பத்தை சமாளிக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன இதுகுறித்த விபரங்கள்:
பிரதமர் பதவியேற்பு விழா இன்று மாலை குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறுகிறது. வானிலை காரணமாக மாலை 7.15 மணியளவில் பதவி பிரமாதம் விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் தற்போது கடுமையான வெப்பம் நீடித்து வரும் நிலையில் நாள்தோறும் 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி வருகிறது. மக்களவை தேர்தல் வாக்குப்பதிவுகள் ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்த நிலையில் இன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் பிரதமர் மற்றும் அமைச்சரவை பதவி ஏற்பு விழா நடைபெறுகிறது.
கடத்த இரண்டு முறை பிரதமர் பதவி ஏற்ப விழா நடைபெற்றது போலவே இந்த முறையும் மாலை விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பகல் நேரம் அதிக வெப்பம் காரணமாக மாலையில் விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
வெப்பத்தை எதிர்கொள்ளும் வகையில் பிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கு பெறும் விருந்தினர்களுக்கு குளிர்ந்த நீர் தெளிப்பான்கள் நிறுவப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான விருந்தினர்கள் அமரும் விதமாக இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன, விழாவில் பங்கு பெறும் விருந்தினர்களுக்கு குடிநீர் வசதி கழிப்பறை வசதி உள்ளிட்ட ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
விழாவில் குழந்தைகள் பெண்கள் மற்றும் முதியவர்கள் ஏராளமானோர் கலந்து கொள்வார்கள் என்பதால் வெயிலில் இருந்து அவர்களை பாதுகாக்கும் வகையில் அடிப்படை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வளாகத்தில் செழிப்பான சிவப்பு கம்பளம் வரவேற்பு அமைக்கப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் வெப்பநிலையை மனதில் கொண்டு போர்ட்டபிள் ஏர் கண்டிஷனர்கள், குளிர்விப்பான்கள் மற்றும் மின்விசிறிகளும் போதுமான அளவு நிறுவப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.