பிரதமர் நரேந்திர மோடி, இன்று கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை சென்னையில் தொடங்கி வைக்கிறார். இதற்காக இன்று சென்னை வந்துள்ளார்.
இதையடுத்து நாளை திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் சாமி தரிசனம் செய்கிறார் பிரதமர் மோடி. பின்னர், திருச்சியிலிருந்து மதுரைக்கு செல்லும் பிரதமர் மோடி, ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் செல்கிறார்.
ராமேசுவரத்திற்குச் செல்லும் பிரதமர் நரேந்திர மோடி அங்குள்ள புகழ்பெற்ற ராமநாத சுவாமி கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்ய உள்ளார்.
பிரதமர் மோடியின் வருகையையொட்டி தமிழ்நாட்டில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. பிரதமர் மோடி வருகை எதிரொலியாக ராமேஸ்வரத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.