ஜி20 தலைமை பொறுப்பை பிரேசிலிடம் பிரதமர் மோடி ஒப்படைப்பு!

டெல்லியில் 2 நாட்கள் நடந்த ஜி-20 மாநாடு நேற்று வெற்றிகரமாக நிறைவடைந்தது. தலைமை பொறுப்பை பிரேசிலிடம் பிரதமர் மோடி ஒப்படைத்தார்.

ஜி20 கூட்டமைப்புக்கான தலைமைப் பொறுப்பானது ஆண்டுதோறும் சுழற்சி முறையில் ஒவ்வொரு நாட்டிடம் ஒப்படைக்கப்படும். அதன்படி, அக்கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தோனேசியாவிடமிருந்து கடந்த ஆண்டு இந்தியா பெற்றது. கடந்த ஆண்டு டிசம்பா் 1-ஆம் தேதியில் இருந்து இந்தியா அதிகாரபூா்வமாக ஜி20 கூட்டமைப்புக்குத் தலைமை வகித்து வருகிறது.

கடந்த 10 மாதங்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் 200-க்கும் அதிகமான ஜி20 கூட்டங்களை இந்தியா நடத்தியது. ஜி20 கூட்டமைப்பு நாடுகளின் தலைவா்களுக்கான உச்சி மாநாடு தில்லியில் சனிக்கிழமை (செப். 9) தொடங்கியது. மொத்தம் 3 அமா்வுகளாக நடைபெற்ற மாநாடு, ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது.

அதையடுத்து, ஜி20 கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை பிரேஸில் அதிபா் லூலா டாசில்வாவிடம் பிரதமா் நரேந்திர மோடி ஒப்படைத். வரும் டிசம்பா் 1-ஆம் தேதியில் இருந்து ஜி20 கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை பிரேஸில் அதிகாரபூா்வமாக ஏற்கும்.

RELATED ARTICLES

Recent News