Connect with us

Raj News Tamil

அபுதாபியில் இந்து கோவிலை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி!

இந்தியா

அபுதாபியில் இந்து கோவிலை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி!

பிரதமர் நரேந்திர மோடி 2 நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று அமீரகம் செல்கிறார். தொடர்ந்து இன்று மாலை ‘அஹ்லன்’ மோடி என்ற தலைப்பில் நடைபெறும் பிரமாண்ட வரவேற்பு நிகழ்ச்சியில் அபுதாபியில் வசிக்கும் இந்திய மக்களை உரையாற்றுகிறார்.

நாளை துபாயில் நடைபெறும் உலக அரசு உச்சி மாநாட்டில் கவுரவ விருந்தினராக கலந்து கொண்டு பேசுகிறார். தொடர்ந்து அன்று மாலை பிஏபிஎஸ் அமைப்பு சார்பில் துபாய்-அபுதாபி ஷேக் ஜாயித் சாலையில் உள்ள அல் முரக்கா பகுதியில் 27 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட கோவிலை மோடி திறந்து வைக்கிறார்.

பின்னர் நாளை இரவே அமீரக சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து அபுதாபியில் இருந்து பிரதமர் மோடி இந்தியா புறப்படுகிறார்.

More in இந்தியா

To Top