சோனியா காந்தியிடம் நலம் விசாரித்த பிரதமர் மோடி!

பிரதமர் மோடி நாடாளுமன்ற கூட்டத் தொடரின் போது வழக்கமாக முதல் நாளில் எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து வாழ்த்து கூறுவது வழக்கம்.

இதன்படி பிரதமர் மோடி நேற்று மக்களவையில் நுழைந்ததும் எதிர்க்கட்சி தலைவர்களிடம் உரையாடினார். அப்போது காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியை அவர் சந்தித்துப் பேசினார். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள சோனியாவிடம் பிரதமர் மோடி நலம் விசாரித்தார்.

சோனியா காந்தியும் அவரது மகன் ராகுல் காந்தியும் கடந்த 18-ம் தேதி பெங்களூருவிலிருந்து டெல்லிக்கு விமானத்தில் திரும்பியபோது திடிரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதன்காரணமாக மத்திய பிரதேச தலைநகர் போபாலில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதுகுறித்தும் பிரதமர் நரேந்திர மோடி, சோனியாவிடம் கேட்டறிந்தார்.

இருவரும் என்ன பேசினர் என்பதை காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி நிருபர்களிடம் கூறும்போது, “பிரதமர் நரேந்திர மோடி, சோனியா காந்திக்கு வாழ்த்து தெரிவித்தார். அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார். அப்போது மணிப்பூர் விவகாரம் குறித்து மக்களவையில் விவாதிக்க வேண்டும் என்று சோனியா காந்தி வலியுறுத்தினார். இதை பிரதமர் மோடி ஏற்றுக் கொண்டார்” என்று தெரிவித்தார்.

RELATED ARTICLES

Recent News