மீண்டும் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி

நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் வரும் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

தேர்தல் நெருங்கிவரும் நிலையில் ஆளும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி உள்பட பல்வேறு அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, பா.ஜ.க. கூட்டணி, நாம் தமிழர் என 4 முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடி மீண்டும் தமிழ்நாடு வர உள்ளார். 4 நாட்கள் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள பிரதமர் மோடி 9ம் தேதி தமிழ்நாடு வர உள்ளார்.

9ம் தேதி வேலூர் செல்லும் பிரதமர் மோடி அங்கு வாகன அணிவகுப்பு பேரணியில் பங்கேற்கிறார். அதன் பிறகு மாலை தென் சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தராஜனை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளார்.

10ம் தேதி நீலகிரின் எல்.முருகனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய உள்ளார். அதனை தொடர்ந்து கோவை தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் அண்ணாமலைக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய உள்ளார்.

RELATED ARTICLES

Recent News