Connect with us

Raj News Tamil

பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வருகிறார்: பொதுக்கூட்டத்தில் ஒரு லட்சம் மகளிர் திரட்ட திட்டம்!

தமிழகம்

பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வருகிறார்: பொதுக்கூட்டத்தில் ஒரு லட்சம் மகளிர் திரட்ட திட்டம்!

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் தனது சுற்று பயணத்தை தொடங்கி உள்ளார்.

இந்த ஆண்டு தொடங்கியதில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி 4 முறை தமிழ்நாடு வருகை தந்து புதிய திட்டங்களையும், பொது கூட்டங்களில் கலந்து கொண்டு வருகிறார்.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி 5 வது முறையாக மார்ச் மாதம் மூன்றாவது வாரத்தில் தமிழ்நாட்டிற்கு வருகை உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது, இந்நிலையில் தமிழ்நாடு பாஜக சார்பில் தென்தமிழகத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ளும் பொதுக்கூட்டத்தில் மகளிர்களை முன்னிலைப்படுத்தி பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடத்த தமிழ்நாடு பாஜக திட்டமிட்டு வருகிறது.

அதற்கான பணிகளையும் தற்போது தமிழ்நாடு பாஜக தொடங்கியுள்ளது குறிப்பாக தமிழ்நாடு பாஜக மகளிர் அணி சார்பில் மாவட்டத்திற்கு 2000 மகளிர் என மொத்தமாக ஒரு லட்சம் மகளிர்களை பொதுக்கூட்டத்திற்கு அழைத்து வரச் சொல்லி தமிழ்நாடு பாஜக மகளிர் அணிக்கு தமிழ்நாடு பாஜக தலைமை உத்தரவிட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளில் மத்திய பாஜக அரசு சார்பில் மகளிர்களுக்கு தொடங்கப்பட்ட புதிய திட்டங்கள் அனைத்தையும் மகளிர்களுக்கு கொண்டு சேர்க்கும் விதமாக இப்பொதுக்கூட்டம் நடைபெறும் என பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பாஜக சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை பிரதமர் நரேந்திர மோடி அறிமுகம் படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Continue Reading
Advertisement
You may also like...

More in தமிழகம்

To Top