Connect with us

Raj News Tamil

பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகை!

தமிழகம்

பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகை!

பிரதமர் மோடி 2 நாள்கள் சுற்றுப்பயணமாக கேரளம், தமிழகம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் பல்வேறு நலத்திட்ட தொடக்க நிகழ்ச்சிகளிலும், கட்சிப் பொதுக் கூட்டங்களிலும் பங்கேற்கிறார்.

இந்நிலையில், பிரதமர் மோடி டெல்லிருந்து தனி விமானத்தில் கேரள மாநிலம், திருவனந்தபுரத்துக்கு இன்று காலை 10 மணியளவில் வந்தடைகிறார்.

திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்துக்குச் செல்லும் பிரதமர் மோடி, அங்கு சுமார் ரூ.1,800 கோடி மதிப்பிலான 3 முக்கிய விண்வெளி உள்கட்டமைப்புத் திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்.

இதைத் தொடர்ந்து, தமிழகத்தின் திருப்பூர் மாவட்டம், பல்லடம் நகரத்துக்கு பிற்பகல் 2 மணியளவில் வரும் பிரதமர் மோடி, தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற ‘என் மண்; என் மக்கள்’ நடைப்பயண நிறைவையொட்டி நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகிறார்.

Continue Reading
Advertisement
You may also like...

More in தமிழகம்

To Top