பிரதமர் மோடி போலந்து நாட்டில் இருந்து சிறப்பு ரயில் மூலம் உக்ரைன் சென்றடைந்தார்.
பிரதமர் மோடி போலந்து பிரதமர் டொனால்டு டஸ்க்கை சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பேசினார்.
பின்னர் அங்கு இருந்து போர் நடந்து வரும் உக்ரைனுக்கு சிறப்பு ரயில் மூலமாக 10 மணி நேரம் பயணம் செய்து கீவ் நகரை பிரதமர் மோடி சென்றடைந்தார். ரயில் நிலையத்தில் உக்ரைன் வாழ் இந்தியர்கள் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.